சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 6501 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5,363 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 5,063 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 233 ஆண்கள் 67 பெண்கள் உட்பட 300 பேர் சிகிச்சையில் உள்ளன. அதேபோல் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை ஆயிரத்து 551 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அதில் 1438 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 ஆண்கள் 33 பெண்கள் 4 குழந்தைகள் உட்பட 113 பேர் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது