நடிகர் ஜீ.வி. பிரகாஷ் நீட் தேர்வு மாணவர்களுக்காக உருகிப் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டார்..!!
நீட் தேர்வுக்கு நிறைய மாணவர்கள் பிரிப்பேர் செய்து இருப்பீர்கள். அதே தைரியத்தோடு எழுதியும் இருப்பீர்கள். உங்க அனைவருக்கும் ஒன்னு சொல்லனும்னு தான் இந்த வீடியோ. வெற்றியோ, தோல்வியோ அதை சரிசமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத வாழ்க்கை இன்ட்ரஸ்ட் ஆக இருக்காது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தோல்வி மிகவும் அவசியம்.இந்த ஒரு பரிட்சையில் தோத்தா வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தம் கிடையாது.
வாழ்க்கை மிகவும் பெருசு. தற்கொலை எதற்கும் முடிவாகாது. இதற்கு முன்னாடி அனிதாவை இழந்து இருக்கிறோம். ஆனால் இப்போது ஒரே நாளில் மூன்று பேரை இழந்திருக்கிறோம். இதைவிட கொடுமையான நாள் இருக்க முடியாது. அந்த மூணு பேரை நாம் இழந்ததற்கு சமூகம்தான் காரணம். முதலில் பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ளுங்கள்.
எதிலும் தோல்வி அடைந்தால் தட்டிக் கொடுங்கள். நீங்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு எக்ஸாம் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்காது. நீங்கள் தான் உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும். எக்ஸாம் போன பரவாயில்லை ஒரு உயிர் போச்சுன்னா எல்லாமே போச்சு. எதையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். வெற்றியோ தோல்வியோ சமமாக பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். பெஸ்ட் ஆஃப் லக். என்று வீடியோ பதிவிட்டார்.