Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் – முன்னாள் நீதிபதி கருத்து …!!

நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு பற்றிய கருத்தை பெருந்தன்மையாக கடந்து விடலாம் என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். சூர்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருத்து எழுந்துள்ளது.

இதற்க்கு நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியன் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என  ஓய்வுபெற்ற நீதிபதி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நீட்தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாக சூர்யாவின் அறிக்கை உள்ளது. அதிக கூட்டம் மிகுந்த நீதிமன்ற நடைமுறைகளை ஒரு நாள் நடக்கும் நீட் தேர்வு நடைமுறை ஒப்பிட முடியாது. நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் நலன் மீதான பயம்தான் காணொளியில் விசாரிக்க காரணம். சூர்யாவின் வார்த்தைகள் அவமதிப்பா ? இல்லையா என்பதை ஆராயாமல் தவிர்த்துவிடலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |