ஊரடங்கை தளர்த்திய பிறகும் அரசியல் கட்சிகளை இயங்கவிடாமல் 144 தடை உத்தரவு முடக்கிவைத்து இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திய பிறகும் 144 தடை உத்தரவு விளக்கமடாமல் இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்க ஊரடங்கை பயன்படுத்தி வருவதாக விமர்சித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப் போவதாக கர்நாடக அரசு பகிரங்கமாக அறிவித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழர்களுக்கு விரோதமான திட்டங்கள் நிறைவேற்றப்படும் ஆனால் தமிழ்நாடு இந்தியாவோடு இருக்க வேண்டுமா என்று கேள்வி எழும் என்று அவர் எச்சரித்தார்.