Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாம நினைச்சா மாத்திடலாம்… ஒன்றிணைவோம், துணை நிற்போம்…. நடிகர் சூர்யா மீண்டும் ட்விட் …!!

ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நீட்தேர்வு பீதியால் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஒரு சேர எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலரும், சூர்யாவின் கருத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. பெருந்தன்மையாக கடந்து போவோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அகரம் பவுண்டேஷன் குறித்த ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒருத்தர் படிச்சா வீடுமாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்த பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர்.நாம நினைச்சா அதை மாத்திடலாம் என்று நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |