கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூடிய கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருக்கு அக்கட்சியினர் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இச்செயல்குழு கூட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ, கார் மற்றும் வாகன நிறுத்தங்களில் முறையான அளவில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் கோவில் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவாக ஆரிஸ் புரம் பகுதியில் நினைவு தூண் அமைத்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து, கழிவுநீரை சுத்திகரித்து அதனை முறைப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மாநில பொதுச் செயலாளர் ஜி.கே. செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டார்கள்.