Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை”… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து மக்களவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கப்பட ஊரடங்கு காரணமாக பல்வேறு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றி மக்களவை கூட்டத்தில் பேசிய போது, சென்ற மார்ச் 25ஆம் தேதி முதல் போடப்பட்ட 68 நாள் ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் எங்களிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள் குறித்த தகவல் இல்லையென்றால் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது என்ற கேள்வியே வரவில்லையே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய-மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், என்ஜிஓக்கள் போன்றோர் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதாக அமைச்சர் சந்தோஷ் குமார் காங்க்வார் பதிலளித்தார்.

Categories

Tech |