காவல் துறை பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த காரணமாக 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கயிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2பேர், தடய அறிவியல் துறையில் 2 பேர் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், இவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகையும் அளிக்கப்பட உள்ளது. மேலும் தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட இருவருக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும் இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5லட்சம் பண வெகுமதியும் வழங்கப்பட உள்ளது.