விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டாகும்.
உங்களின் நேர்மறை எண்ணத்தால் நீங்களும் உங்களை சுற்றி இருப்பவர்களும் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.