சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதிர்பாராத பிரச்சனையால் மன உளைச்சல் வரும்.
வேலையில் இருப்பவர்களுக்கு சுமை கூடும். அக்கம்பக்கத்தினரிடம் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை பேசாமல் இருங்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மன சங்கடம் நீங்கி அன்பு பெருகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே உத்தமம். வெளிவட்டாரத் தொடர்பு மூலம் புது நட்பு உண்டாகும். சுபகாரிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கோபத்தை குறையுங்கள் அதுவே நல்லது. செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள். வீண் அலைச்சல் ஏற்படும். தொழிலில் திடீர் தடைகள் உண்டாகலாம்.எதை செய்தாலும் திட்டமிட்டு செய்யுங்கள்.இன்று உங்களின் ராசிக்கு முருகப்பெருமானை வழிபட்டு எந்த காரியங்களையும் செய்யுங்கள் வெற்றிகரமாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிகப்பு நிறம்.