திமுகவின் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பது ஃபராடு தனம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வு குறித்த விவாதம் அரசியல் அரங்கில் இருந்து வருகிறது. ஆங்காங்கே மாணவர்கள் நீட்டுக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது நீட் தேர்வுக்கு தயாகிய மூன்று மாணவர்கள் நீட் அச்சத்தால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது.
இந்த சம்பவத்திற்கு நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் அதுவும் தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அதன் தலைவர் மு க ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
திமுகவினர் இந்த கருத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வு முறையை கொண்டுவந்தது திமுக அங்கம் வகித்த ஐமுகூ அரசு. 2013 ல் முதல் நீட் தேர்வு நடத்தியதும் அதுவே. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கூடாது என்று வாதாடியது பசி மனைவி நளினி சிதம்பரம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்தாகுமாம். இதெல்லாம் 1967ல் சொன்ன ரூபாய்க்கு 3படி போன்ற ஃபராடு தனம்தான் என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறையை கொண்டுவந்தது திமுக அங்கம் வகித்த ஐமுகூ அரசு. 2013 ல் முதல் நீட் தேர்வு நடத்தியதும் அதுவே. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கூடாது என்று வாதாடியது பசி மனைவி நளினி சிதம்பரம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்தாகுமாம். இதெல்லாம் ரூபாய்க்கு 3படி ஃபராடு தனம்தான்
— H Raja (@HRajaBJP) September 14, 2020