தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி,
தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போதிலும், பார்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கொரோனா வழிமுறைகளுடன் வருகிற 18-ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாஸ்மாக் உரிமத்தை புதுப்பிக்க பார் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.