Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கட்டிப்பிடி வைத்தியம்” தப்பா நினைக்காதீங்க…… எத்தனை பயன்கள் உள்ளது தெரியுமா…?

கட்டிப்பிடி வைத்தியத்தின் மருத்துவ குணங்கள் குறித்து  இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயர் நாம் முதன் முதலாக அறிந்தது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வாயிலாக தான். அதில் நடிகர் கமல் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் நபர்களையும், நோயில் சிக்கி தவிக்கும் நோயாளிகளையும் அன்போடு அரவணைத்து மேற்கொள்ளும் வைத்தியமே கட்டிப்பிடி வைத்தியம்.இந்த  வைத்தியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வித ஆறுதலையும், தைரியத்தையும் அளித்து அவர்களை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் என்பதே அதனுடைய கருத்து. அதன்படி,

நம் துணை அல்லது மனதுக்கு மிகவும் பிடித்தவர்களை கட்டிப்பிடிக்கும் போது, மனதில் ஒருவித அமைதி தோன்றும், நம்முடன் துணைநிற்க ஆள் உண்டு என்ற நம்பிக்கை பிறக்கும். இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் இரத்த ஓட்டத்தையும்  மேம்படுத்தும்.  நீங்கள் நேசிப்பவரை கட்டிப்பிடிக்கும் போது ஆக்சிடாஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.

மேலும் இது நினைவாற்றலை  மேம்படுத்தவும், மூளையில் சுறுசுறுப்புக்கு  இடையே நல்ல சமநிலையை ஏற்படுத்தவும்  உதவுகிறது. பொதுவாக  கட்டிப்பிடி வைத்தியம் என்றாலே பலர் இதனை கூச்சத்திற்கு உரிய விஷயமாக தப்பாக நினைத்து கொள்கிறார்கள் ஆனால் சக மனிதனுக்கு பிரச்சனைகளில் சரியான ஆறுதல் தரக்கூடிய வைத்தியம் இது மட்டும் தான் இதை விட சிறந்த மருந்து இல்லை. 

Categories

Tech |