Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… மொத்தமா 25பேர்…. சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு …!!

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 25 மூத்த வழக்கறிஞ்ர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  நேற்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும்  விவகாரம் எதிரொலித்தது .

அதே போல நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை கொண்ட நிகழ்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கொரோனா காரணமாக நீதிமன்றங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகின்றது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதேபோல நடிகர் சூர்யா பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்றும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஓய்வுபெற்ற 6 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர் .அததைத் தொடர்ந்து தற்போது மூத்த வழக்கறிஞர்கள் மேலும் 25 பேர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மூத்த வழக்கறிஞ்ர்கள் என்ஜிஆர் பிரசாத் மற்றும் சுதா ராமலிங்கம் தலைமையிலான 25 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்
சூர்யா பேசியதற்கு நடவடிக்கை எடுப்பது  பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதற்கு சமம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |