எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் நிறுவனம் ஸ்டேட் பாங்கிடம் பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் பணமோசடி என்பது வெகுவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அலுமினிய தாள்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனம் SBI வங்கியிடம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது ஸ்டேட் வங்கி கொடுத்த புகாரில், எஸ் டீ நிறுவனம் போலியான ஆவணங்களை கொடுத்ததாகவும், தங்கள் வங்கியில் இருந்து 338, 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.இதையடுத்து மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், எஸ் டீ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.