Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டில் மட்டும்… 3000 ஐ தாண்டிய விதிமீறல்கள் செய்த பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3000 ஐ தாண்டி விதி மீறல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசு பாகிஸ்தான் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஏராளமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சினை என்பது முடிவுக்கு வராத பட்சத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை 3,186 முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஜம்மு பிராந்தியத்தில் இந்தோ – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 242 முறை எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் அரசு நடத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் குறிப்பிட்டார். பெரும்பாலான தாக்குதல்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்ததாகவும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டபோது அதற்கு ஏற்றவாறு, தக்க பதிலடி இந்தியா கொடுத்துள்ளதாகவும் ஸ்ரீபாத்நாயக் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |