கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய தமிழக முதல்வர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவர்களின் மரணத்திற்கு காரணம் திமுகதான் என்று முதல்வர் ஆவேசமாக பேசினார்.
பின்னார் அவையில் பேசிய திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான முக.ஸ்டாலின், கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும். கொரோனா மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, குழுவின் அறிக்கை என்ன ஆனது?
கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.