Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வருக்கு கொரோனா… சீக்கிரம் குணமடைவேன் என நம்பிக்கை…!!

டெல்லியின் துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண மக்களை மட்டுமல்லாமல் பெரிய தலைவர்கள், நடிகர்கள் என பாகுபாடு பாராமல் அனைவரையும் தாக்கி வரும் இந்த கொரோனாவால் சில கட்சியின் எம்எல்ஏக்கள் உயிரிழந்துமுள்ளனர். அந்த வகையில் தற்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனக்கு லேசான காய்ச்சல் இருந்தாகவும், அதற்காக கொரோனா சோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வேறு எந்த தொந்தரவுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் ஆசிர்வாதத்தால் நான் முழுமையாகக் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |