Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு ஆசையா… எந்த அணியும் படைக்காத இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும்… ஐயரின் விசித்திர விருப்பம்..!!

ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்..

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன..

இதற்கிடையே இந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.. அந்த வகையில் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் நீங்கள் முறியடிக்க விரும்பும் சாதனை என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் பதிலளித்தாவது, ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  சாதனை படைக்க தான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்..

அதாவது, ஒரு சீசனில் டெல்லி அணி எதிர்கொள்ளும் 14 போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே அவரது ஆசை..  2008 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இதுவரை எந்த ஒரு அணியுமே 14 போட்டியில் வென்றது கிடையாது.. எனவே இந்த விசித்திர சாதனை படைக்க ஆசைப் பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகியதை அடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பதவி ஏற்று இளம் வீரர்களை வைத்து அணியை சிறப்பாக வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |