Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும்..! போட்டி பொறாமை விலகும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபங்கள் பெருகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெறமுடியும். சிலருக்கு திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.  அதிர்ஷ்டமான எண்: 5   அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |