ஏர் விமான நிறுவனம் தற்போது கடன் சுமையால் தத்தளித்து வருவதாக அத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற இரண்டு வழிகள் மட்டுமே அரசிடம் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விமான சீர்திருத்த மசாதாவை தாக்கல் செய்துவிட்டு அதுகுறித்து பேசினார்.
அப்போது அவர், சுமார் 60 ஆயிரம் கோடி கடன் உள்ள ஏர் இந்தியாவை யாராவது வாங்கி அதை லாபகரமாக இயக்குவார்கள் என்று நம்புவதாக கூறினார். ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் அதற்கு இருக்கும் கடன் தொகையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று ஏற்கனவே அறிவித்ததை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.