காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை கத்தியால் குத்தியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை செய்ததில் கொலையானவர் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டணத்தை சேர்ந்த விக்னேஷ் என்றும் அவர் மெக்கானிக் என்பதால் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக காரைக்குடி வந்தவர் என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.