நெல்லை அருகே பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த திரு அன்பு என்பவர் தனது தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெறுவதற்காக வானூர் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பட்டா மாறுதல் தொடர்பாக துணை வட்டாட்சியர் திரு மாரியப்பன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திரு அன்பு புகார் செய்துள்ளார். இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பணத்தை துணை வட்டாட்சியர் மாரியப்பணிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக மாரியப்பணை கைது செய்தனர்.