மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகரியங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு ஆறுதலைக் கொடுக்கும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பலன்களை அடைய முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கக் கூடும் என்பதால் இன்று தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பெண்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். நீங்கள் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.