Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமுக கதாநாயகனுடன் நடிக்கயிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!!

எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் மெய் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக கதாநாயகனுடன் நடிக்கயிருக்கிறார்.

சித்திக், கமல்ஹாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Related image

இந்த படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், படத்தில் நடிக்கும் கதாநாயகன் நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்திற்கு எர்த்தாற்போல தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதை மற்றும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு புதுமுக கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறார்.

Related image

சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த படம் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறியுள்ளார்.

Categories

Tech |