ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள்.
கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர் தொடர்புடைய விஷயங்களில் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால் எதையும் சாதிக்க முடியும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்வதால் உங்களுக்கு நன்மையும் நிம்மதியும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.