கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும்.
பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப்பெற முடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.