துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அளவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை பிறக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.