துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருந்துவந்த கடந்தக்கால பிரச்சினைகள் எல்லாம் விலகிச்செல்லும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். இதுவரை இருந்த எதிர்ப்புகள் மறைந்து ஏற்றங்கள் ஏற்படும். போட்டி, பொறாமைகள் குறையும். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைக்கூடும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.