தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய நாளாக இருக்கும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமதத்திற்கு பின் நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.