Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல்… “நாளை களமிறங்கும் 11 சிங்கங்கள் யார்?”… மரண வெயிட்டிங்கில் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சென்னை 11 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்..

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.. எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது.. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேவையும் கொண்டாடித் தீர்த்தனர்..

12 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த ரசிகர்கள் கூட்டம் இன்று பல மடங்காக உயர்ந்து உள்ளது.. இந்தியா மட்டுமன்றி சர்வதேச கிரிக்கெட் பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.. உலக கோப்பை என்றாலும் உள்ளூர் கோப்பை என்றாலும் சரிக்கு சமமான பலத்துடன் பல போட்டியில் பகையுடன் மோதும் 2 அணிகளின் போட்டியின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும்..

அது போன்று ஐபிஎல் போட்டியில் எதிர்பார்ப்புகள் மிகுந்த போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகள் மோதும் போட்டி தான்.. இந்த இரண்டையும் ஐபிஎல் அணிகள் என்பதைவிட ஐபில் அசுரர்கள் என்று சொல்வது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.. ஏனென்றால் இரண்டு அணிகளுமே பலத்திலும் சரி, வியூகத்திலும் சரி ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல..

இந்த இரண்டு அணிகளும் நாளை நடைபெற உள்ள நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோத உள்ளன.. இந்த அணிகளின் மோதலால் சமூக வலைதளங்கள் இப்போது ஸ்தம்பிக்க ஆரம்பித்துள்ளது.. ஹிட்மேன் ரோகித் என்று பெரும் கூட்டமும், தல தோனி என்று மாபெரும் கூட்டமும் சமூக வலைதளங்களில் கொடி பிடிக்கத் துவங்கியுள்ளன.. நாளைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற விவாதங்களும் இரு அணிகள் இடையே சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது..

அத்துடன் இரண்டு அணிகளின் பலத்தையும், அணியில் இடம்பெறும் வீரர்களையும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.. சிஎஸ்கேவை பொறுத்தவரை அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. உண்மையில் அந்த 11 பேர் யார் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும்  அணி நிர்வாகத்துக்கும் தான் தெரியும்.. இருப்பினும் கிரிக்கெட் வல்லுனர்கள் பார்வையில் இருந்தும், சென்னை அணி வீரர்கள் பட்டியலில் இருந்தும், இதற்கு முன்னர் நடந்த ஐபிஎல் தொடரின் கணிப்பின் படியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாளைய  11 பேர் யார் யார் என்பதை காண்போம்..

நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆகியோர் இடம்பெறலாம்.. இரண்டாமிடத்தில் களமிறங்கும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இல்லாததால் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் இறங்க வாய்ப்பு உள்ளது.. அதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும்,  5ஆவது இடத்தில் தல தோனியும், 6ஆவது இடத்தில் ஆல்ரவுண்டர் பிராவோவும் களமிறங்குவார்கள்..

அவரைத் தொடர்ந்து ஜடேஜாவும், பின்னர் சுழல்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவும் அணியில் இடம்பெறுவார்கள்.. பின்னர் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர், ஷர்த்துல் தாகூர் மற்றும் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கடைசியில் இறங்குவார்.. இந்த தொடரில் முரளிவிஜய் இடம் பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் இறங்க வாய்ப்புள்ளது.

அதேபோல இம்ரான் தாஹிர் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதில் லுங்கி நெகிடி இறங்க வாய்ப்புள்ளது.. இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.. ஆகவே அவரை நீக்கி நெகிடியை இறக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் இருப்பதாக சொல்லப்படுவதால் தாஹிருக்கு அதிக வாய்ப்புள்ளது.. நாளை 07 : 30 மணிக்கு நடைபெறும் போட்டிக்காக மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்..

Categories

Tech |