மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றுவரை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர்கள் வழிப்பறி செய்யும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த 10-ம் தேதி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை இரண்டு இளைஞர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த நபர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் இருவரையும் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.