திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு கொடுத்துள்ள 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.