Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு மக்கள் அதிர்ச்சி ….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அடுத்துள்ள கொழுமம் கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்களில் மயில்கள் அதிகளவில் இருப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும்  விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கரிசல் குளம் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்று கால்நடை மருத்துவர் மயில்களுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தி அங்கேயே குழித்தோண்டி புதைத்தனர். மயில்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா அல்லது பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை உண்டதால் உயிரிழந்ததா என விசாரணை நடைபெறுகிறது.

Categories

Tech |