Categories
அரசியல்

தமிழகத்தில் 5.30 லட்சம் பேருக்கு தொற்று..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,685 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரேநாளில் 989 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 5 ஆயிரத்து 525 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் குணமடைந்தனர். தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று ஒரே நாளில் 543 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 288 பேருக்கும், செங்கல்பட்டில் 265 பேருக்கும், திருவள்ளூரில் 258 பேருக்கும், கடலூரில் 254 பேருக்கும், திருப்பூரில் 187 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 151 பேருக்கும், கொரோனா தொற்று    உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |