நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது.
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்றி வரும் தனிநபர்கள் நிறுவனங்கள் மீது கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட வங்கிக்கு தற்போது உள்ள சட்டப்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது வங்கிகள் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தை பயன்படுத்தி கம்பெனி அல்லாது வியாபாரத்தை முழுவதுமாக கைப்பற்றி விடுவார்கள். கைப்பற்றிய கம்பெனி மற்றும் வியாபாரத்தை வேறு ஒருவருக்கு விற்று சொத்துக்களை விற்று வரும் பணத்தை வங்கிகள் கொடுத்த கடன் மற்றும் அதற்கான வட்டியை கழித்துக் கொள்வார்கள். மீதி பணம் இருந்தால் கடன் வாங்கியவர்களுக்கு கொடுப்பார்கள்.
இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விளக்க அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம் 2020-இல் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் தொடர்பாக சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிதியமைச்சர் திரு நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். இந்நிலையில் வங்கி திவால் சட்டத்திருத்தம் மசோதா விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவையில் இன்று நிறைவேறி உள்ளது.