மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.