கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவரை சாத்தூர் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு ஜெயம் கண்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து மாணவர் மலை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சார்பு ஆய்வாளர் திரு ஜெய கண்ணன் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரி அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தை பகுதியில் நேற்று இரவு முதல் உறவினர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் மூன்று காவலர்கள் மீது சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சார்பு ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.