இன்றைய பஞ்சாங்கம்
21-09-2020, புரட்டாசி 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி இரவு 11.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
விசாகம் நட்சத்திரம் இரவு 08.48 வரை பின்பு அனுஷம்.
மரணயோகம் இரவு 08.48 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 21.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு தேவையற்ற பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்படும். பகல் 03.11 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாக இருங்கள் அதுவே நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குழந்தைகளுடன் இருந்த கருத்துவேறுபாடு அகலும். தொழிலில் திறமைக்கேற்ப பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சிக்காக போட்ட திட்டம் அனைத்தும் வெற்றி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். கடன் பிரச்சனை அனைத்தும் குறையும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு தொழிலில் உடன் இருப்பவர்களுடன் ஒற்றுமை குறைய வாய்ப்பு அதிகம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து பாதிப்பு விலகி சீரான நிலை இருக்கும்.எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுங்கள் அதுவே நல்லது. குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு உண்டாகும். எந்த செயல் செய்தாலும் மந்தமாக இருப்பீர்கள். உறவினர்களால் மனஸ்தாபம் வரக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் வீண் பிரச்சினைகளில் இருந்து நீக்கலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபநிகழ்ச்சிகள் முன்னேற்றம் காண்பீர். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கும் எண்ணம் கூடும்.பெரியவர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். திடீர் பணவரவு ஏற்படும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பணவரவு இருந்தாலும் செலவும் கூடும். நண்பர்களால் மன அமைதி குறையும். சுபகாரியங்களில் தடை உண்டாகும்.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நல்ல செய்திகள் வீடு தேடி வரும். உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தி வெற்றியை காண்பீர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்புகள் உயரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர். தேவையற்ற செலவுகளை குறைப்பது நாள் பிரச்சனைகள் நீங்கும். அரசுத் துறையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார ரீதியில் நட்பு உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் செலவு ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். தேவையில்லாத பிரச்சனைகள் வரும். சேமிப்பு பணம் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்பு தேடி வரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு மன தைரியத்துடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் புதிய மாற்றங்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் எளிதில் கிட்டும். தொழிலில் பணி சுமை குறையும்.நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதாரம் சீராக இருக்கும். உத்தியோக ரீதியில் புதிய கருவிகளை வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். தொழிலில் இருந்த போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு உண்டாகும். வீட்டில் வீண் பிரச்சனை ஏற்படும். உங்களின் ராசிக்கு பகல் 03. 14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழிலில் புதிய முயற்சிகள் எடுத்தால் மதியத்திற்கு பிறகு மேற்கொள்ளுங்கள் அதுவே வெற்றியை கொடுக்கும்.