Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! பாராட்டு பெறுவீர்..! பணவரவு இருக்கும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

பணம் பல வழிகளில் தேடிவரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் ஆதரவாகச் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீல நிறம்.

Categories

Tech |