மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சிறப்பான பணவரவுகள் இருக்கும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் சற்று கால தாமதமாகலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.