விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். திருமண சுபகாரியங்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறிய தாமதத்திற்குப் பிறகு சாதகமான பலன் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பயணங்களால் மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பலரை வழிநடத்திச் செல்லக்கூடிய கௌரவமான பதவிகள் தேடிவரும். சிலருக்கு வெளியூர் மூலமாக திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.