தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றும் என்றாலும் கெடுதல் எதுவும் இருக்காது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.