கேரளத்தில் பல பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப் பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுயுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் ஒடிசா மேற்குவங்கம், கிழக்கு உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் தெலுங்கானாம் மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.