விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்னும் பேச்சுக்கே இடமில்லை என சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் திரு. சூப்பர் சீங் பாதல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோன்மணி அகாலி தளத்தில் சேர்ந்த மத்திய அமைச்சர் அரசிம்மராத் கவுர் பதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய சிரோன்மணி அகாலி தளம் தலைவர் திரு. சுப்பிர் சிங் பதால் தற்போதைய நிலையில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அங்கம் வகிப்பது குறித்து விவாதிக்க கட்சியின் முக்கிய குழு விரைவில் கூடும் என்று தெரிவித்துயிருந்தர்.
இந்நிலையில் விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்னும் பேச்சுக்கே இடமில்லை என திரு.சூப்பர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தாங்கள் விவசாயிகளின் பக்கம் எப்போதும் நிற்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறிய நிலையில் திரு. சுப்பிர் சிங் பதாலில் இந்த கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது.