மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்தது.
மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் அமைந்துள்ளது படேல் காம்பவுண்ட். இதில் அமைத்த 3 மாடி கட்டிடம் அதிகாலை 3:30 மணியளவில் இடித்து விபத்துக்குள்ளானது. மக்கள் அயர்த்து தூங்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும்,போலீசாரும் விரைத்து சென்று மீட்பு பணிகளை வேகப்படுத்தினர் . அதில் 20 பேர் காயங்களுடனும், 8 சடலங்களும் மீட்கப்பட்டது, மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டு , பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.