திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தி வருகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.
தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் புரியும் இரு கட்சிகளும் எவ்வாறு தேர்தல்களில் ஜெயித்து வந்ததது என. தற்போது இரு கட்சிகளின் தலைமை என்பது வெற்றிடமே அதனால் தான் தடுமாறுகிறார்கள். இதை பயன்படுதுவதற்கு பல கட்சிகள் பல நடிகர்கள் பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என எண்ணி கமல் சீமான் அமீர் சூர்யா என அனைவரும் அவ்வப்போது வாய் திறந்து பேசி கிளர்ச்சியை உண்டாக்கும் விதமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கட்சி விரைவில் தொடங்குவர் என அறிவித்த ரஜினி கப்சிப், அவரும் நவம்பரில் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற பேச்சு அடிபட்டுள்ளது. அவர் கண்டிப்பாக பாஜக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்பது உறுதி. ஏனெனில் அவரின் முதலவர் வேட்பாளர் என அறியப்பட்ட அண்ணாமலை IPS பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.பாஜக ரஜினி கட்சி ஆரம்பித்து கணிசமான இடங்களை பெற்றால் துணை முதல்வர் பதவி பாஜகவிற்கு செல்லும். மேலும் டெல்லி பாஜகவும் இதைத்தான் விரும்புகிறதாம்.