கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஐநா சபையின் 75-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் திரு. டொனல்ட் டிரம்ப் முதலாம் உலக யுத்தம் முடிந்து 75 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் ஒரு சர்வதேச போராட்டத்தில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் கொரோனாவை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட நாட்டை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் கொரோனாவுக்கு 3 தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் இருப்பதாக தெரிவித்த டிரம்ப் அவை உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கூறினார்.