Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக்கொலை…!!!!

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட  கோவைப்பாக்கம் என்ற ஊரை சேர்ந்த ராமச்சந்திரன். 50 வயதான இவர் அ.தி.மு.க சார்பில்  பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருத்துள்ளார் . நேற்று அவர் கடப்பாக்கம் அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில்  கிடத்த அவரை மீட்டு அருகில் இருத்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினர். இதை தொடர்ந்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஷ்வரி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலை தொழில் போட்டியா அல்லது வேறு காரணமா என்று இரு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.இந்த கொலைக்கு சம்பத்தமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில்  உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Categories

Tech |