திருப்பூரில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அருகே கே. செட்டி பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் மணிகண்டன் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சரண்யா சுடுதண்ணி ஊற்றி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக மணிகண்டனை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். சில மணி நேரத்திலேயே மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக கூறி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் மணிகண்டனை போலீசார் அடித்துக் கொன்றதாகவும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. முன்னதாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருவர் பலியானது குறித்து விசாரணை நடத்தப அந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மணிகண்டன் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது